
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் வட்டார பள்ளிகள் பங்கேற்ற குறுவட்ட செஸ் போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் காந்த வாசன், இணை செயலாளர் சுகன்யா துவக்கி வைத்தனர். 11, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பங்கேற்ற போட்டிகள் நான்கு நிலைகளில் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 76 மாணவர்களும், 59 மாணவிகளும் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் போட்டிகள் தனித் தனியே நடைபெற்றது. மொத்தம் 5 சுற்றுக்களாக நடைபெற்றது . இப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வட்டாரம், மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

