ADDED : ஏப் 04, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை செயின்ட் சேவியர் தெரு முத்தமிழ் செல்வன் 19. தாமரைக்குளம் கல்லூரி விலக்கு அருகே ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்கிறார்.
இவரிடம் டி.கள்ளிப்பட்டி மகாராஜா 28. இவரது நண்பர்கள் சின்னச்சாமி 34. சக்திவேல் 25. ஆகியோர் ஐஸ் கிரீம் கடைக்குள் நுழைந்து, முத்தமிழ் செல்வனிடம் கத்தியை காட்டி ரூ.500 மற்றும் ஐஸ்கிரீம் பெட்டியை கேட்டு மிரட்டினர்.
அப்போது கடைக்கு வந்த உரிமையாளர் அரவிந்தகுமரன் கண்டித்து சத்தமிட்டார்.
தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, மகாராஜாவை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

