ADDED : ஏப் 15, 2024 01:08 AM
ஆண்டிபட்டி, - தேனி லோக்சபா தொகுதியில் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால் மூன்று கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள், நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ளனர்.
பிரசாரத்திற்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா, அதற்கான பணம் எங்கிருந்து யார் மூலம் கொண்டு செல்லப்படுகிறது, எந்தெந்த இடங்களில் இருந்து பிரித்து வாக்காளர்களுக்கு அனுப்பப்படுகிறது.
வாக்காளர்களிடம் பணத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடும் நபர்கள் குறித்து தேர்தல் பறக்கும் படையினர் உன்னிப்பாக கவனித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே அரசியல் கட்சியினர் மூன்று கட்டங்களாக தங்களது பூத் கமிட்டி, மற்றும் கிளை நிர்வாகிகளின் செலவுக்கு பணப்பட்டுவாடாவை கச்சிதமாக முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

