ADDED : ஆக 21, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கவிழா நடந்தது. சங்க துணைத்தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் ஐ.டி.ஐ., படிப்புகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டன. ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம், சங்க பொதுச்செயலாளர் மகேஷ், பொருளாளர் கண்ணன், பாலிடெக்னிக் பொருளாளர் தாமரைகண்ணன் உள்ளிட்டோர் பேசினர். முதலாமாண்டு மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.