ADDED : பிப் 22, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சில்க்வார்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் 104 வது ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழா ஊர் நாட்டாமை மனோகரன் தலைமையில் நடந்தது. எஸ்.எஸ்.ஏ.,மேற்பார்வையாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியை நாகமணி, உதவி ஆசிரியர் கவிதா, முன்னாள் ஆசிரியர்கள், மதிய உணவுத் திட்ட பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

