ADDED : ஆக 25, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் கருவூல கணக்குத்துறை உயர் அலுவலர் சங்கத்தினர் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கருவூலத்தறையில் ஆறுமண்டலத்தை 8 மண்டலமாக பிரிக்க வேண்டும். கருவூல அலுவலர் பணியிடங்களை இணை இயக்குனர் பணியாக ஊதிய திருத்தம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர் அருணாச்சலம், நிர்வாகிகள் சசிகலா, சீனிகணேசன், மதுபாலா, ஜெயராணி, சலீம், வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

