ADDED : ஜூலை 10, 2026 09:01 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 11–பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி டாஸ்மாக் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
சங்கத்தினர் குடும்பத்தினருடன் டாஸ்மாக் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாகராஜன், மாநில நிர்வாகிகள் குபேந்திரன், சண்முகம் முன்னிலை வகித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 45 பேரை கைது செய்து திருமண செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
