ADDED : ஜூலை 09, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 10–
மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 600 பேர்கள் மாயமானதாக வழக்கு பதிவாகி உள்ளது.
இதில் பல வழக்குகள் கள்ளக்காதல், காதல் விவகாரம், பெற்றோர் திட்டியதால் பிள்ளகைள் ஓட்டம் என பதிவாகி உள்ளன. இதில் 30 வயதுக்குட்பட்டவர்கள் 300 பேர் மாயமாகி உள்ளனர். இவ்வழக்குகளில் போலீசார் முறையாக விசாரணை நடத்திடவும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க எஸ்.பி., பிரவீன் கவுதம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என காணாமல் போன உறவிர்கள் எதிர்பார்க்கின்றனர்.
