ADDED : மே 22, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
தேனி, மே 23-தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 71 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் போலீசாரால் ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கொலை, கொள்ளை முயற்சி, பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 71 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 62 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 9 பேர் சில வழக்குகளில் தொடர்பு இருந்ததால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்,’ என்றனர்.
