ADDED : ஜூன் 29, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் 170 ஒப்பந்த பணியாளர்கள்
வேலை செய்து வருகின்றனர். துப்புரவு பணி, பாதுகாப்பு, சமையல் உதவியாளர், கார்பெண்டர் உட்பட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சம்பளம் உயர்வு, நிலுவை தொகை வழங்க வேண்டும்.
கொரோனா காலத்தில் பணி செய்தற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவன மண்டல பொறுப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.