ADDED : ஜூன் 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஜூன் 25-
பெரியகுளம் வி.நி.அரசு மேல்நிலைப்பள்ளியில் 1975- -–76 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 50 ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினர். பள்ளி தலைமையாசிரியர் கோபிநாத் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ராஜ்குமார்,சுகுமார், கோபிநாத், செல்வராஜ், ராமசுப்பிரமணி, சேதுராமன், சந்திரசேகர் குப்புரத்தினம், ராமகிருஷ்ணன், சுப்பிரமணி, ஜோதி, கருப்பையா ஆகியோர் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தலா 10 இரும்பு மேஜைகள், இருக்கைகளை பள்ளிக்கு வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
--
