
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளியில் 81வது ஆண்டு விழா, பெற்றோர் தின விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் வீராசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராம்சங்கர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார். விழாவில் கலை நிகழ்ச்சி நடந்தது.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டது. ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.

