ADDED : ஆக 08, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பேப்பர்பேக், பைல், என்வெலப் கவர் தயாரிக்க 10 நாள் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி ஆக., 19ல் துவங்குகிறது.
இதில் கிராமபுறத்தை சேர்ந்த வேலை இல்லாத 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும், மதிய உணவு இலவசம். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ஆதார், புகைப்படத்துடன் தேனி உழவர் சந்தை எதிரே இயங்கும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.