ADDED : ஜூலை 07, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், ஜூலை 8-–
பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி தனபால்சிங் 34. தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு அருகே உள்ள தனியார் தனியார் மது பாரில் மது குடிதார். அங்கு வந்த தேவதானப்பட்டியைச் சேர்ந்த காமாட்சி, இவரது நண்பர்கள் செல்வம் மற்றும் இருவர் காலி மது பாட்டிலை மேஜையில் உடைத்தனர். அப்போது கண்ணாடி சிதறல்கள் தனபால்சிங் மீது விழுந்தது. இது குறித்து கேட்ட தனபால்சிங்கை, காமாட்சி மற்றொரு மது பாட்டிலால் தாக்கினார். மற்றவர்கள் கைகளால் தாக்கினர். காயமடைந்த தனபால்சிங் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பற்றி தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--
