ADDED : மே 23, 2024 03:55 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவர் முத்துச்சாமி தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் பஸ், வாகனங்கள் வெளியேறுவதில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் ஆட்டோக்கள் நிறுத்த இயலாமல் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. தடுப்பு சுவர் கட்டும் பணியை நிறுத்தி உதவி செய்திட வேண்டும் என்றிருந்தது.
