ADDED : மே 04, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
போடி, மே 5 -
போடி அரசு பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு, முதியோர் கல்வி, ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க முகாம் சுந்தரராஜபுரத்தில் நடந்தது.
கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். சுந்தரராஜபுரம் இந்து ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். சுற்றுச்சூழல், தூய்மை, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி பெண்களுக்கு மாணவர்கள் எடுத்து கூறினர்.
