ADDED : ஜூலை 19, 2026 05:01 PM

அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 20–
தேனியில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
மாரத்தானை ஏ.டி.எஸ்.பி., கலைகதிரவன் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் அருகே துவங்கிய மாரத்தான் பங்களாமேடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் வழியாக ரத்னா நகரில் நிறைவடைந்தது. ஆண்கள்,பெண்கள் பிரிவில் நடந்த மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அமைப்பு உறுப்பினர் நாராயணபிரபு, மற்ற உறுப்பினர்கள் மாரத்தானை ஒருங்கிணைத்தனர்.
