ADDED : ஆக 06, 2026 04:04 PM
அ நிறம் | அளவு
போடி, ஆக.
7 -
போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளித் தலைவர் செந்தில் தியாகராஜன், செயலாளர் இனாயத் உசேன்கான் தலைமை வகித்தனர். முதல்வர் ஜோன் பிரிட்டோ, துணை முதல்வர் சித்ரா தேவி, முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பதாகைகள் எந்தியபடி ஊர்வலம் பள்ளியில் துவங்கி ஸ்டேட் பாங்க் ரோடு, பஸ் ஸ்டாண்ட், பெரியாண்டவர் கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.
