ADDED : மே 23, 2024 03:50 AM
ஆண்டிபட்டி: டி.சுப்பலாபுரம் நாழிமலை குவாரி அருகே மண் அள்ளும் வாகனம் திருட்டு சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் 61, கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். பெரியகுளம் அருகே காமக்காபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் 30, கடந்த 2019ல் நாழிமலையில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் கல் குவாரி வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை.
பொக்லைன் வாகனத்தை பார்ப்பதற்காக ராமகிருஷ்ணன் 2021 டிசம்பர் 28ல் டி.சுப்புலாபுரம் சென்றுள்ளார். வாகனத்தில் சில பாகங்களை காணவில்லை. வாடகைக்கு எடுத்த வினோத்குமாரையும் சந்திக்க முடியாமல் ராமகிருஷ்ணன் திரும்பினார். நான்கு மாதங்களுக்கு பின் வினோத்குமாரிடம் கேட்டபோது ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொக்லைன் வாகனம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து ராமகிருஷ்ணன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வினோத்குமார், டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் 25, சந்திபாண்டி 44, தேனியை சேர்ந்த தங்க கணேஷ் 38, தினேஷ் 43 ஆகியோரை கைது செய்தனர்.
காமக்காபட்டியைச்சேர்ந்த ரகுவை தேடி வருகின்றனர்.
