ADDED : ஜூலை 03, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 4–பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட தண்டுபாளையம் வராகநதி பாலத்தில் இருந்து ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த தடுப்புகம்பிகளில் சிலர் பிளக்ஸ் பேனர்கள் கட்டினர். இதனால் தடுப்பு கம்பிகள் சேதமடைந்து வந்தது. இதனை சுட்டிகாட்டி தினமலர் நாளிதழில் ஜூன் 29ல் படம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பு கம்பிகளில் கட்டியிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
