ADDED : மே 10, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
தேனி, மே 11–
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது.
அக்கட்சியை சேர்ந்த சுவந்த் அதிகாரி மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். இதனை தேனி நேரு சிலை அருகே மாவட்ட பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். தேனி நகரத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட துணை தலைவர் மோகன்தாஸ், பொது செயலாளர்கள் மலைசாமி, முத்துமணி, பொருளாளர் பொன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
