ADDED : மே 24, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், மே 25-–
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்கு தெரு பரமன் 50, கொத்தனார். ஆண்டிபட்டியில் வேலை முடித்து விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். திண்டுக்கல்–குமுளி பைபாஸ்ரோட்டில் சருத்துப்பட்டி விலக்கில் தனியார் பஸ் பரமன் டூவீலரில் மோதியது. விபத்தில் காயமடைந்த பரமன் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். விபத்து தொடர்பாக தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
--
