ADDED : மார் 01, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது.
இதற்காக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று திருவிழாவிற்கு வந்தவர்கள் ஊருக்கு செல்வதற்கு அரசு டவுன்பஸ்சில் வத்தலக்குண்டு சென்று கொண்டிருந்தனர்.
நிலக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் துரைப்பாண்டி 49. ஓட்டினார். காட்ரோடு அருகே பஸ் செல்லும் போது முன்னாள் டூவீலரில் சென்றவர், பஸ் மீது கல் எறிந்ததில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
டிரைவர், கண்டக்டர் மர்மநபரை பிடிப்பதற்குள் தப்பினார். தேவதானப்பட்டி போலீசார் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சோதனையிட்டு விசாரிக்கின்றனர்.