/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெயிலால் பிரசாரத்தை தள்ளி வைக்கும் வேட்பாளர்கள்
/
வெயிலால் பிரசாரத்தை தள்ளி வைக்கும் வேட்பாளர்கள்
ADDED : மார் 28, 2024 06:41 AM
பெரியகுளம்: வெயிலின் தாக்கத்தால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நேரம் பிரசாரத்தை தள்ளி வைக்கின்றனர்.
தேனி லோக்சபா தொகுதியில் ஓட்டு சேகரிப்பதில் அரசியல் கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என மெய்பிக்கும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு 24 நாட்களே உள்ளது. இதனால் காலை, மாலை, இரவு 10:00 மணி வரை சுறுசுறுப்பாக செயல்படும் வேட்பாளர்கள், வெயிலின் தாக்கத்தால் மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை பிரசாரம் செய்வதை தள்ளிப்போடுகின்றனர். அந்த நேரங்களில் கட்சியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைசெய்கின்றனர்.-