ADDED : ஜூலை 14, 2026 07:02 PM

அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 15–தேனி நகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட உள்ள கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பார்கவி, நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா முன்னிலை வகித்தனர். பயிற்சியில் பிரத்யேக கணக்கெடுப்பு செயலியை பயன்படுத்துவது, அதில் தகவல்களை பதிவேற்றம் செய்வது, பதிவேற்றிய தகவல்களை சரிபார்ப்பது உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது. நகர்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆக., 1ல் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
