ADDED : செப் 12, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.விழாவிற்கு கல்லுாரிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
முதல்வர் சீனிவாசராகவன், துறைத்தலைவர் சுகன்யா பேசினர். எசட்.எப்., கமர்சியல் வாகன கன்ட்ரோல் சிஸ்டம் இந்தியா நிறுவன சென்னை கிளை டிசைனிங் பிரிவு இணை மேலாளர் சக்கரைப்பாண்டி, நுண்திறன்கள் வளர்த்தல், துறையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை பற்றி பேசினார்.

