கே.வி., பள்ளியில் வகுப்புகள்அடுத்த வாரம் துவக்க ஏற்பாடு
கே.வி., பள்ளியில் வகுப்புகள்அடுத்த வாரம் துவக்க ஏற்பாடு
ADDED : ஆக 03, 2026 07:51 PM
தேனி, ஆக.4–தேனியில் புதிதாக துவங்கி உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வகுப்புகள் அடுத்த வாரம் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனியில் அல்லிநகரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டு முதல் கேந்திரியா வித்யாலயா பள்ளி துவங்கப்பட உள்ளது. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக 1600 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் 1179 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.
கே.வி., பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:முதலாம் வகுப்பில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 10 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கு 219 பேர் தகுதி பெற்றிருந்தனர். குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு சிறப்பு குழந்தை என முதலாம் வகுப்பிற்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்ற வகுப்புகளில் பெற்றோர்களின் பணி, பணியட மாற்றம் உள்ளிட்ட தகுதிகள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வானவர்கள் விபரங்கள் இன்று மாலை வெளியிடப்படும். அடுத்த வாரம் வகுப்புகள் துவங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றனர்.
