ADDED : மே 03, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
கூடலுார், மே 4--–
கூடலுாரில் நேற்று முன்தினம் மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
காந்திகிராமம் ராஜா கிணறு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. அருகில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான விவசாயிகள் அலறியடித்து ஓடினர். இடியால் தென்னை மரத்தின் மேல் பகுதி, மையப் பகுதி சேதமடைந்தது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததால் அப்பகுதியில் இருந்து விவசாயிகள் வெளியேறினர்.
