/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூட்டுறவு பட்டய பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
/
கூட்டுறவு பட்டய பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஏப் 26, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கைக்கான முன்பதிவு ஏப்.,29ல் துவங்குகிறது.
பயிற்சி செப்.,ல் துவங்கி ஓராண்டு நடைபெறும். இரு பருவ முறைகளில் தமிழில் மட்டும் பயிற்சி நடத்தப்படும். பயிற்சி கட்டண விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். விரும்புபவர்கள் www.tncuicm.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆண்டிப்பட்டியில் செயல்படும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அணுகலாம் என இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார்.

