/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கவுன்சிலர் கணவருக்கு கத்திக்குத்து; பேரூராட்சி தலைவரின் கணவர் கைது தி.மு.க., பேரூராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 29, 2024 11:05 PM

தேவாரம் : தேனி மாவட்டம், தேவாரம் டாஸ்மாக் கடை முன் ஏற்பட்ட தகராறில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்திய பேரூராட்சி தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர். பேரூராட்சி தலைவர், அவரது மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேவாரம் பேரூராட்சி 7 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கவிதா 34. மூன்று நாட்களுக்கு முன்பு பேரூராட்சியில் தலைவர் லட்சுமி (தி.மு.க.,) தலைமையில் கூட்டம் நடந்தது. கவிதா வார்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டு, தலைவரை குறை கூறி உள்ளார். இதனால் லட்சுமியும், அவரது கணவரும் தெற்கு மாவட்ட தி.மு.க., பொருளாளருமான பால்பாண்டி 56, யும் கவிதாவை மிரட்டி உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு கவிதாவின் கணவரும் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளருமான ரமேஷ் குமார் 38, பென்னிகுவிக் நகர் டாஸ்மாக்கில் மது வாங்க சென்றார். கடை மேற்பார்வையாளர் கனகராஜ் 40, விற்பனையாளர், அடையாளம் தெரியாத மற்றொரு நபர் டாஸ்மாக் கடையை மூடினர். 'இன்னும் அரை மணி நேரம் இருக்கும் போது ஏன் கடையை மூடுகிறீர்கள்' என ரமேஷ்குமார் கேட்டுள்ளார்.
இதுகுறித்து கனகராஜ், பேரூராட்சி தலைவர் லட்சுமியின் கணவரும், பார் உரிமையாளருமான பால்பாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த லட்சுமி, பால்பாண்டி, மகன் பாண்டி செல்வம் சேர்ந்து ரமேஷ் குமாரை அடித்து கீழே தள்ளினர். பாண்டி செல்வம் கத்தியால் ரமேஷ் குமாரின் வயிற்றில் குத்தி காயப்படுத்தி, 'இனி எங்களிடம் பிரச்னை செய்தால் கொலை செய்து விடுவோம்' என மிரட்டினர். பலத்த காயம் அடைந்த ரமேஷ்குமார் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தேவாரம் போலீசார் பால்பாண்டியை கைது செய்து, லட்சுமி 50, பாண்டி செல்வம், கனகராஜ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.