ADDED : மே 17, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
தேனி, மே 18–
தேனி தப்புகுண்டுவில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘ஏ’டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது.
நேற்று ரத்தினம் சி.சி, மேனகா மில்ஸ் சி.சி., அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் சி.சி., அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. வெங்கடேசன் 94, ஆதித் சாம்ராஜ் 69 ரன்கள் எடுத்தனர். ரத்தினம் அணி வீரர் கார்த்திக் செல்வம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சேசிங் செய்த ரத்தினம் சி.சி., அணி 42 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.
