/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிரான்ஸ்பார்மர் சீரமைப்பதில் தாமதம்
/
டிரான்ஸ்பார்மர் சீரமைப்பதில் தாமதம்
ADDED : மே 07, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி முதலக்கம்பட்டி ரோட்டில் முத்து கிருஷ்ணாபுரம் அருகே மின் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது. இப் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இல்லை. தனியார் நிறுவனங்கள் விவசாய மின் மோட்டார்கள் உள்ளன.
டிரான்ஸ்பார்மர் பழுதாகி 5 நாட்களாகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை.
மின்சாரம் தடைபட்டுள்ளதால் தனியார் நிறுவனங்கள், விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன.
சரி செய்ய மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.