நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் விலைவாசி உயர்வைகட்டுப்படுத்த கோரியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் அழகேஸ்வரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவிமுருகன், திருமலைகொழுந்து, பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.