நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வனிதா தலைமை வகித்தார்.
சங்க மாநில இணைச்செயலாளர் நாகலட்சுமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயப்பாண்டி, முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர்களை அரசு பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்.
ஓய்வு பெறும் போது அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.