ADDED : மே 07, 2026 11:42 PM
அ நிறம் | அளவு
தேனி, மே 8–
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கம்யூ.–வி.சி.
கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மா. கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ., கட்சி மாவட்டச் செயலாளர் பெருமாள், வி.சி., கட்சி பெரியகுளம் தொகுதி மாவட்டச் செயலாளர் சுசி தமிழ் பாண்டியன், மா கம்யூ., மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், வி.சி. நிர்வாகி அன்பு வடிவேல், கம்யூ., நிர்வாகிகள் நாகராஜன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
