ADDED : ஆக 05, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, ஆக. 6 -
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்துணவு திட்ட வட்டார அலுவலர் நாகராணி தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 1500க்கு மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உட்பட 3 ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள ஓட்டுநர்கள், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் உட்பட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் துணைத் தலைவர் சக்தி உட்பட பல பேசினர்.
