தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வசதிகள் இல்லாத மயானத்தால் சிரமம்

வசதிகள் இல்லாத மயானத்தால் சிரமம்

வசதிகள் இல்லாத மயானத்தால் சிரமம்


ADDED : மே 21, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி, மே 21 -

சிலமலை மயானத்தில் தண்ணீர், மின்வசதி, நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

சிலமலையில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சிலமலை வடக்கு பகுதியில் உள்ள மயான ரோடு சேதம் அடைந்து உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு தண்ணீர் வசதி இல்லாததால் நீண்ட தூரம் உள்ள தோட்டங்களுக்கு மக்கள் சென்று தண்ணீர் சுமந்து வருகின்றனர். இறந்தவர்களின் உடலை எரியூட்டும் கொட்டகை இல்லாததால் திறந்த வெளியில் எரியூட்டுகின்றனர். வெயில், மழை காலங்களில் மயானத்திற்கு வருபவர்களுக்கு நிற்பதற்கு கூட நிழற்கூரை வசதி இல்லை. இறுதி சடங்கு செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us