/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தினகரனுக்கு ரூ.4.95 கோடி சொத்து சொந்த வாகனம் இல்லை
/
தினகரனுக்கு ரூ.4.95 கோடி சொத்து சொந்த வாகனம் இல்லை
தினகரனுக்கு ரூ.4.95 கோடி சொத்து சொந்த வாகனம் இல்லை
தினகரனுக்கு ரூ.4.95 கோடி சொத்து சொந்த வாகனம் இல்லை
ADDED : மார் 28, 2024 01:35 AM
தேனி:தேனி லோக்சபா தேர்தலில் போட்டியிடும்பா.ஜ., கூட்டணி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் குடும்ப சொத்து மதிப்பு ரூ.4.95 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
தினகரன் வேட்பு மனுவில் அவரது சொத்து விபரங்களை வெளியிட்டுஉள்ளார். அதில் கையிருப்பு ரூ.54,825 உள்ளது. நான்கு வங்கி கணக்குகளில் ரூ.13,27,948 இருப்பு உள்ளது. சொந்த வாகனம், நகைகள் இல்லை.
மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.19.82 லட்சம். அசையா சொத்து மதிப்பு ரூ.57.44 லட்சம் ஆகும். இவர் அரசுக்கு ரூ.28 கோடி செலுத்த வேண்டிய பாக்கி உள்ளது. வங்கி கடன்கள் ரூ.9.25 லட்சம் உள்ளன. இவரது மனைவி அனுராதாவிடம் கையிருப்பு ரூ.23,084 உள்ளது. நான்கு வங்கி கணக்குகளில் ரூ.38.75 லட்சம் உள்ளது. இது தவிர பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளாக ரூ.57.76 லட்சம் உள்ளது.
ரூ.8.96 லட்சம் மதிப்பிலான கார், ரூ.12.53 லட்சம் மதிப்பில் 1024 கிராம் தங்கநகைகள், ரூ.15.15 லட்சம் மதிப்பில் வைர நகைகள் உட்பட அசையும் சொத்துக்களாக ரூ.1.69 கோடி உள்ளது. அசையா சொத்துக்கள் ரூ.2.48 கோடி மதிப்பில்உள்ளன. தினகரன் குடும்ப சொத்து மொத்த மதிப்பு ரூ.4.95 கோடி.