ADDED : ஏப் 01, 2024 06:44 AM
கம்பம் : தேர்தல் பணியில் தொண்டர்களை கவனிப்பில் தி.மு.க. அ.தி.மு.க. முந்துகிறது.
தேனி லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் அ.ம.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் முந்தியும், தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர் பின்தங்கியும் இருந்தனர். தற்போது மூன்று வேட்பாளர்களுமே பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்பின் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்துவதில் தி.மு.க. அ.தி.மு.க., முன்னிலையில் உள்ளது.
பூத் கமிட்டியினருக்கு கவனிப்பு என்பது சம்பிரதாயம். இவர்கள் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றுபவர்கள். தி.மு.க. அ.தி.மு.க. பல முறை பூத் கமிட்டியினரை கவனித்து விட்டு, நகர், ஒன்றிய நிர்வாகிகளையும் தி.மு.க. தரப்பில் பார்த்து விட்டனர். ஆனால் அ.ம.மு.க., அமைதியாக உள்ளது.
