ADDED : ஆக 07, 2026 07:05 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஆக. 8-
தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகராட்சி தலைவர் சுமிதா, பேரூர் செயலாளர் தமிழன், திலகராஜா, மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அரிசிக்கடையிலிருந்து பஸ்ஸ்டாப் வரை ஊர்வலமாக சென்று, கருணாநிதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
