/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி வகுப்பு
/
டி.என்.பி.எஸ்.சி., இலவச பயிற்சி வகுப்பு
ADDED : மே 23, 2024 03:56 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில் பி.எட்., எம்.எட்., மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
வகுப்பில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் பியூலா ராஜினி வரவேற்றார்.
பயிற்சியாளர் ஜெகதீஸ் சந்திரபோஸ், ஆர்.ஐ., முத்துப்பாண்டி, ஆசிரியர் வேல்முருகன் ஆகியோர் எவ்வாறு போட்டித்தேர்வு எழுதுவது, தேர்வின் முக்கியத்துவம் பற்றி பயிற்சி அளித்தனர்.
உதவிபேராசிரியை சர்மிளா நன்றி கூறினார்.

