ADDED : ஜூன் 27, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் லாரி மீது ஏறிய போது, மின் ஒயர் உரசியதால் டிரைவர் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பலியானார்.
சின்னமனூர் தேவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை 33, இவர் மணப்பாறையில் நேற்று மாடுகளை ஏற்றி கொண்டு கம்பம் வந்துள்ளார். மணி கட்டி ஆலமரம் பகுதியில் கொட்டகையில் மாடுகளை இறக்கி விட, லாரியின் மேல் பகுதிக்கு ஏறியுள்ளார். அப்போது லாரியின் அருகே சென்ற உயர் அழுந்த மின் ஒயர் டிரைவர் மீது உரசியது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது இறந்தது தெரிந்தது. கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சின்னதுரைக்கு ராதிகா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.