ADDED : ஏப் 06, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு மூணாறு அருகே கூடாரவிளை எஸ்டேட் நெற்றிகுடி சென்ட்ரல் டிவிஷனில் ஆட்டோ டிரைவர் சசிகுமார் 43, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 43, குருபாதம் 45, ஆகியோர் மார்ச் 20ல் சசிகுமார், அவர் மகள்கள் மிதுலா 19, முத்துலெட்சுமி 18, ஆகியோரை வழி மறித்து தாக்கினர். அதில் மனமுடைந்த சசிகுமார் மார்ச் 22ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அது தொடர்பாக சசிகுமாரின் மகள்கள் இருவரும் போலீசில் புகார் அளித்தனர்.
தேவிகுளம் போலீசார் மிதுலா, முத்துலெட்சுமி ஆகியோரை தாக்கியதாக முருகன், குருபாதம் ஆகியோரை கைது செய்தனர்.

