ADDED : ஜூலை 05, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 6–
தேனியில் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த இஸ்லாமிய மாணவர்கள், மாணவிகளுக்கு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
டாக்டர் சையது சுல்தான் இப்ராஹீம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பொன்ராஜ் கொந்தாலம், ஸ்ஊதிய்யா கல்விக்குழுமம் முதல்வர் சீராஜ்தீன் அஹமது, ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் முன்னிலை வகித்தனர். கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினர்.
