ADDED : ஏப் 06, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளராக கவுரங் பாய் மக்வானா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் செலவின பார்வையாளர்களாக தரம்வீர் தண்டி, விஜயேந்திர குமார் மீனா நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் விஜயேந்திரகுமார் மீனா உடல் நலகுறைவால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப்பதிலாக மஹாராஸ்டிராவைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி கனிஸ்ட் யாசு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

