ADDED : மே 09, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
மூணாறு, மே 10-
பொது இடங்களில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டிய ரோட்டோரக் கடைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவின் எதிரே கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து விதிமுறைகள் மீறி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளின் குப்பை உள்ளிட்ட கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவதாக தெரியவந்தது. அது குறித்து மூணாறு ஊராட்சி நிர்வாகம் ஆய்வு நடத்தி குப்பைகளை கொட்டிய பத்து கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்தது. அத்தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
