ADDED : மே 24, 2024 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி நகராட்சியில் சத்துணவு பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கலெக்டர் நேர்முக உதவியாளர் காந்திராஜா (சத்துணவு) தலைமையில் நடந்தது.
போடி தீயணைப்பு துறை அலுவலர் உதயகுமார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மதன்குமார், சுகாதாரத்துறை அலுவலர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். சத்துணவு பணியாளர்கள் உணவு சமைக்கும் போது எதிர்பாரத விதமாக ஏற்படும் தீ விபத்தை தடுப்பது, விபத்தில்ஈடுபட்டவர்களை காப்பாற்றுவது குறித்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தீயணைப்பு படை வீரர்கள் செய்து காண்பித்து விழிப்புணர்வைஏற்படுத்தினர்.