ADDED : ஆக 19, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நலம் மருத்துவமனை,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இலவச முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.
அறிவியல் இயக்க தேனி மாவட்டத்தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். முகாமில் சாலை விபத்து, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், தீ விபத்துகளின் போது எவ்வாறு முதலுதவி அளிப்பது என செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது. மருத்துவமனை மருத்துவ மேலாளர் டாக்டர் முகமது பாசித் முகாமை ஒருங்கிணைத்தார்.
நர்சிங் சண்முகப்பிரியா, பாண்டீஸ்வரி பயிற்சி வழங்கினர். ஆரோக்கிய உப குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன், அறிவியல் இயக்க மாநில குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட நிர்வாகிகள் வெங்கட்ராமன், தேவேந்திரன், ஜெகநாதன், பாலசுப்பிரமணியம் பங்கேற்றனர். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் மோகன் பேசினார்.