/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குப்பையில் வைத்த தீ பரவி வாகனங்கள் சேதம்
/
குப்பையில் வைத்த தீ பரவி வாகனங்கள் சேதம்
ADDED : மே 04, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் குப்பையில் வைத்த தீ பரவி வாகனங்கள் எரிந்து சேதமாகின.
அப்பகுதியில் வசிக்கும் ரோய் வீட்டின் அருகே கார், இரண்டு டூவீலர்கள் ஆகியவற்றை நிறுத்தி இருந்தார்.
அதே பகுதியில் குவிந்துள்ள குப்பபையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். வேகமாக பரவிய தீயில் கார், டூவிலர்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.