ADDED : ஜூன் 14, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூன் 15–
தேனியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பெத்தணக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊக்க ஊதிய பலன்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாள் அன்பழகன், மாவட்ட பொருளாளர் அருண்குமார், துணை தலைவர் ஜனனி, நிர்வாகிகள் அப்பாஸ், பரமன், லட்சுமி நாராயணன், லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
